ஹோட்டலுக்குள் புகுந்து சப்ளையரை சரமாரியாக தாக்கும் இன்னொரு ஹோட்டல் ஓனர் .. சிசிடிவி வைரல்!
Home > தமிழ் news
உணவகத்தில் சப்ளை செய்துகொண்டிருந்த சப்ளையர் ஒருவரை திடீரென ஒருவர் வந்து இழுத்துப் போட்டு கடை முன்பாக வைத்து அடித்துள்ள சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை பரபரப்புக்குள்ளாகியுள்ள்து.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒரு உணவகத்தில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார் வேலுமணி. இவரை திடீரென ஒரு மாலை நேரத்தில் வந்து கடை முன்பாக இழுத்துப்போட்டு அடிக்கத் தொடங்கியுள்ளார் ராமகிருஷ்ணன் என்பவர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
விசாரித்ததில் ராமகிருஷ்ணன் என்பவர் ஒரு உணவகத்தின் முதலாளி என்றும் அவரது உணவகத்தில் வேலை பார்த்த வேலுமணி என்பவர், சொல்லாமல் கொள்ளாமல் தற்போது வேறு ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. எனினும் வேலுமணியை சரமாரியாக தாக்கிய ராமகிருஷ்ணனின் செயல் வீடியோவாக பரவிவருகிறது.
BIZARRE, CCTV, VIRAL, VIDEO, TAMILNADU, DINDUGAL