'வரப்போகுது 100 ரூபாய் நாணயம்'...அதில் இடம்பெற இருக்கும் தலைவர் இவர்தான்!
Home > தமிழ் newsவிரைவில் அறிமுகபடுத்தப் பட இருக்கும் 100 ரூபாய் நாணயத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உருவப்படம் பொறிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
வாஜ்பாய் உருவப்படம் பொறித்த 100 ரூபாய் நாணயம் 35 கிராம் எடை கொண்டதாக இருக்கும். ஒரு பக்கம் ஆங்கிலம் மற்றும் தேவநாகரி மொழியில் 100 ரூபாய் என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் வாஜ்பாயின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
வாஜ்பாய் பிறந்த மற்றும் மறைந்த ஆண்டான 1924 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் அச்சிடப்பட்டிருக்கும். இது அவரது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 1924-ம் ஆண்டு வாஜ்பாய் பிறந்த ஆண்டை குறிப்பிடும். 2018-ம் ஆண்டு என்பது வாஜ்பாய் மறைந்ததை குறிக்கும்.
மேலும் அசோக தூண் மத்தியில் வாய்மையே வெல்லும் என பொருள்படும் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் நாணயத்தில் இடம்பெற்றிருக்கும்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 1996-ம் ஆண்டின்போது 13 நாட்களும், 1998-ம் ஆண்டின்போது 13 மாதங்களும், 1999-ம் ஆண்டில் இருந்து 6 ஆண்டுகளும் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.