போனி கபூர் துபாய் திரும்பினார். ஸ்ரீதேவி தங்கியிருந்த விடுதிக்கு சென்ற போனி கபூர் ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாகவும், தொடர்ந்து ஒரு சிறிய உரையாடலுக்கு பின்பு ஸ்ரீதேவி குளிக்க சென்றதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் ஸ்ரீதேவி வெளிவராததால் சந்தேகமடைந்த போனி கபூர், குளியலறை கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
ஸ்ரீதேவியை விரைந்து மருத்துவமனை எடுத்து சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.