மொத்தமாக 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட கருணாநிதி, ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. 33வது வயதில் தொடங்கி மொத்தம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினர். 45வது வயதில் முதலமைச்சரானார். ராஜாஜியில் துவங்கி, 11 முதல்வர்களின், 14 பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில், அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.