தளபதி விஜய்யின் மாஸ்டருடன் வெளியாகிறதா இந்த ஹீரோ படம் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சசிக்குமார் நடித்து சமீபத்தில் வெளியான 'கென்னடி கிளப்' , 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் ஸ்டைலிஷான போலீஸாகவும் பாசமான அண்ணனாகவும் இருவேறு பரிணாமங்களை தனது நடிப்பில் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

Thalapathy Vijay's Master might be clash with Sasikumar's Kombu Vatcha Singamda

நடிகர் சசிக்குமார் நடிப்பில் தற்போது 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'நாடோடிகள் 2', 'எம்ஜிஆர் மகன்', சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வரும் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

இதில் 'சுந்தரபாண்டியன்' படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் அவர் இணைந்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை ரெதன் பட நிறுவனம் மற்றும் பங்கஜம் டிரீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கனா புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த படம் 14 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Master might be clash with Sasikumar's Kombu Vatcha Singamda

People looking for online information on Kombu vatcha singamda, M Sasikumar, Master, Vijay will find this news story useful.