'கொன்னுட்டீங்க ப்ரோ' மனதார 'மாஸ்டர்' நடிகரை வாழ்த்திய துல்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நாளை நடைபெற இருக்கும் இவ்வேளையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்கள் எதிர்பார்ப்புகளை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். 'மாஸ்டர்' படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'வாத்திகமிங்' பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகியுள்ளது.

சாந்தனுவை பாராட்டிய துல்கர் சல்மான் | Dulquer whishes shanthnu for Master song

குறிப்பாக இப்பாட்டிற்கு நடனம் ஆடாதவர்களே இல்லை எனலாம். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகரும், அவரின் அன்புக்குறியவருமான சாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் 'வாத்தி கமிங்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாந்தனு மிகவும் சிறப்பாக நடனமாடி இருப்பதாக பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், '' உங்கள் நடனம் என்னை கொல்லுகின்றது!! பள்ளி நாட்களிலிருந்தே உங்கள் நடனத்திறமையை பார்த்து பிரமித்து வருகின்றேன்! மேலும், மேலும் நீங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றீர்கள்!! மாஸ்டர் படத்திற்கு எனது  வாழ்த்துக்கள் சாந்தனு,'' என வாழ்த்தி இருக்கிறார். பதிலுக்கு சாந்தனு, '' ரொம்ப நன்றி பிரதர்! உங்களுடைய அடுத்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்,'' என தெரிவித்து இருக்கிறார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சாந்தனுவை பாராட்டிய துல்கர் சல்மான் | Dulquer whishes shanthnu for Master song

People looking for online information on Dulquer salmaan, Master, Shanthanu Bhagyaraj will find this news story useful.