இளம் இயக்குநரை நடிகராக களம் இறக்கியிருக்கும் புது இயக்குநரின் இரண்டாம் பட அறிவிப்பு இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெட்டி ஒலி சீாியல் மூலம் புகழ்பெற்று, 'சிங்கம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தலை நகரம்', 'சிவாஜி', 'கோ' உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் 'கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Bose Venkat next movie with Uyiyadi fame Vijayakumar

சாதி மற்றும் ஆணவ கொலை பற்றி பேசிய கன்னி மாடம் போல, போஸ் வெங்கட் ஜூன் மாதம் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார், இந்தப் படத்தில் உறியடி மற்றும் உறியடி 2 படப் புகழ் இயக்குனர் - நடிகர் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறாா். நடிகா் பசுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டை மையமாக வைத்து, தண்ணீர் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளைப் பற்றி இப்படம் பேசும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் படமாக்கவுள்ளனர். முதல் படத்துக்கு ஆதரவு தந்ததைப் போல தன் இரண்டாவது படத்துக்கும் ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கி ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார் போஸ் வெங்கட்.

Entertainment sub editor

Bose Venkat next movie with Uyiyadi fame Vijayakumar

People looking for online information on B Vijayakumar, Bose Venkat will find this news story useful.