capmaari 90 others

அயோத்யா விவகாரத்தை கையிலெடுக்கும் 'தலைவி' ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் விஜய் 'தலைவி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் நடித்து வருகிறார்.

After Thalaivi Kangana Ranaut announced her next based on Ram Mandhir incidents

'தலைவி' படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விப்ரோ மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, விட்டல் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனையடுத்து நடிகை கங்கனா ரனவத் முதல் தயாரிப்பாக அபரஜிதா அயோத்யா என்ற பெயரில் ராமர் கோவில் வழக்கை படமாக்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பணிபுரியவிருக்கும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

After Thalaivi Kangana Ranaut announced her next based on Ram Mandhir incidents

People looking for online information on Aparajitha Ayodhya, Kangana Ranaut, Ramar Mandhir, Thalaivi will find this news story useful.