நடப்பு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள 41 ஆட்டங்களில் வெற்றி தோல்விகளுடன் ஹைதராபாத், சென்னை, பஞ்சாப், மும்பை ஆகிய நான்கு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
கடைசி நான்கு இடங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், டெல்லி அணிகள் உள்ளன. பிளே ஃஆப் சுற்றை நிர்ணயிக்க இன்னும் 15 போட்டிகள் மீதமுள்ள நிலையில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய, எந்த அணிக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை இங்கே பார்க்கலாம்.
மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை கிளிக் செய்யவும்...
ஐபிஎல் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டம் என்பதை மாற்றி பவுலர்களுக்கான ஆட்டம் என்பதை, ஹைதராபாத் அணி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணி, எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வென்றால் கூட அதிகாரப்பூர்வமாக பிளே ஃஆப் வாய்ப்பினை உறுதி செய்துவிடும்.