2 ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டு வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹைதராபாத் போலவே சென்னை அணியும் இன்னும் 1 ஆட்டத்தில் வென்றால் பிளேஃஆப் சுற்றினை உறுதி செய்து விடலாம். சென்னை அடுத்ததாக ராஜஸ்தான் அணியினை 11-ம் தேதியும், ஹைதராபாத் அணியினை 13-ம் தேதியும், டெல்லி அணியினை 18-ம் தேதியும், பஞ்சாப் அணியினை 20-ம் தேதியும் எதிர்கொள்கிறது.