தமிழ்நாட்டு மக்களை சூரியனுக்கு ரொம்ப புடிச்சுப் போய்ட்டதால, காலையிலேயே தன்னோட திருப்பணியைத் தொடங்கி நம்மள வாட்டி வதைக்க ஆரம்பிச்சுடுறார்.
அவருக்குப் பயந்து நம்ம வெளில போகாம இருக்க முடியுமா? அப்படி இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா பகல் கனவு காணக்கூடாது. அதனால நம்ம பாசக்கார சூரியன்கிட்ட இருந்து நம்மள எப்படிப் பாதுகாத்துக்கலாம்னு இங்கே பார்ப்போம்.
இங்கே வெயில் காலத்துல சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் வழிமுறைகள் பத்தி பாக்கலாம். எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தாலும் இதுல சில 'டிப்ஸ்' உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கலாம்.
அதனால கடைசிப் பக்கம் வரைக்கும், ஒருதடவை சோம்பல் படாம போய் பாருங்க பாஸ்...
பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி, முலாம்பழம், கிர்ணிப்பழம், எலுமிச்சை போன்றவற்றையும், காய்கறிகளில் வெள்ளரி, தக்காளி, பூசணி, பீர்க்கன், சுரைக்காய், முள்ளங்கி, கேரட் ஆகியவைகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.