SOORARAI POTTRU (TAMIL) MOVIE REVIEW


Review By : Movie Run Time : 2 Hours 30 Minutes
Censor Rating : U
Genre : Biopic , Drama
CLICK TO RATE THE MOVIE
Soorarai Pottru (Tamil) (aka) Surarai Potru review
SOORARAI POTTRU (TAMIL) CAST & CREW
1 of 2
Production: 2D Entertainment, Sikhya Entertainment
Cast: Aparna Balamurali, Mohan Babu, Paresh Rawal, Suriya
Direction: Sudha Kongara
Screenplay: Aalif Surti, Ganeshaa, Shalini Ushadevi, Sudha Kongara
Story: Sudha Kongara
Music: GV Prakash Kumar
Background score: GV Prakash Kumar
Cinematography: Niketh Bommi
Dialogues: Vijay Kumar
Editing: Sathish Suriya
Distribution: Amazon Prime Video

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா வைரஸ் காரணத்தால், இத்திரைப்படம் இன்று நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அபர்னா பாலமுரளி, கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை கதையான Simply Fly என்ற புத்தகத்தை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மிக குறைந்த கட்டனமாக, ஒரு ரூபாயில் சாமானிய மக்களை விமானத்தில் பறக்க செய்ய, கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் போராட்டங்களையும் மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யா. கச்சிதமாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகிறார். 1977 முதல் 2003 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் பயணிக்கும் மாறா கதாபாத்திரத்திற்கு, நடிப்பில் மட்டுமல்ல தனது உடல் வடிவிலும் நேர்த்தி காட்டி ஆச்சர்யப்பட வைக்கிறார். மாறாவாக பெருங்கனவை சுமந்து துடிப்பதை போலவே., சூரரைப் போற்று படத்தை தனது தோளிகளில் தாங்கி பிடித்து கொண்டு செல்கிறார் சூர்யா.

ஒவ்வொரு படத்திற்கும் தனது சிறப்பான நடிப்பை கொடுத்து வரும் சூர்யாவின் கிரீடத்தில், சூரரைப் போற்று மற்றுமொரு வைரக்கல்லை பதித்திருக்கிறது. அழுகை, கோபம், ஆத்திரம், காதல் என பலவித உணர்வுகளை திரையில் மிக வலிமையாக வடித்து ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார். அபர்னா பாலமுரளி, பொம்மி கதாபாத்திரத்திற்கு நறுக் தேர்வு. சுதா கொங்கராவின் கதாநாயகிகளுக்கே உரித்தான அடாவடியும் நக்கல் பேச்சும் கொண்டு ரசிக்க வைக்கிறார். சூர்யாவுடனான காதல் காட்சிகள் மட்டுமின்றி, எமோஷனல் காட்சிகளிலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் அபர்னா.

கதாநாயகனின் பக்கபலமாக வரும் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து செல்கின்றனர். ஊர்வசியும் பூ ராமுவும் சில காட்சிகளிலேயே வந்தாலும், மனதை கரைக்கும் பர்ஃபார்மன்ஸ் காட்டுகின்றனர். மோகன் பாபுவின் கெத்தான உடல் மொழியும் தெலுங்கு கலந்த உறுதியான வசன உச்சரிப்பும் கச்சிதம். பல மொழிகளில் படம் வெளியாவதால், சில வேற்று மொழி நடிகர்களின் முகங்களை காண முடிகிறது. அதுமட்டும் நம்மை லேசாக அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒரு பாக்சிங் வீராங்கனையின் போராட்டங்களை சொல்லி வெற்றிக்கண்ட சுதா கொங்கரா., இம்முறை சாமானியனாக இருந்து சாதித்த தொழில்முனைவோர் கோபிநாத்தின் போராட்டங்களை கையில் எடுத்து மீண்டும் வெற்றி கண்டு இருக்கிறார். குறிப்பாக ஏர்போட்டில் சூர்யா தவிப்பது மற்றும் அம்மாவுடன் கதறி அழுவது உள்ளிட்ட எமோஷனல் காட்சிகளை வெகு சிறப்பாக கையாண்டு க்ளாப்ஸை அள்ளுகிறார். அதே போல சூர்யா - அபர்னா இடையேயான காட்சிகளை காதலும் இளமையும் ததும்ப கொடுத்து சூப்பர் ஆல் ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா உள்ளிட்ட எழுத்தாளர்களின் குழு., விமான சேவையில் இருக்கும் நுட்பங்களை முடிந்தளவு எளிமையாக புரியவைக்க முயற்சி செய்கிறது. உறியடி விஜய் குமாரின் வசங்கள் கண்டிப்பாக பாராட்டபட வேண்டிய பணியை செய்திருக்கிறது. சமூகத்தில் நிலவும் அரசியல் தொடங்கி, அதிகார அமைப்புகள் வரை வசனங்களால் சபாஷ் வாங்குகிறார் விஜய்குமார். அதை மதுரை மணத்தோடு கொண்டு வந்து சேர்த்ததில் விருமாண்டியின் பங்கும் பாராட்டிற்க்குரியது.

நிக்கெத் பொம்மியின் கேமரா பிரம்மாண்டத்தையும் எதார்த்ததையும் விஷுவலாக கொண்டு வந்து, மேலும் அழகு சேர்கிறது. கேமராமேனின் லென்ஸும் ஆர்ட் டைரக்டர் ஜாக்கியின் பணியும், வெவ்வேறு காலக்கட்டங்களில் நிலவும் கதையை எந்த குறையுமின்றி பக்கவாக காட்டுகிறது. எடிட்டர் சதீஷ் சூர்யா அளவிற்கு ஏற்ப தனது கத்திரியை பயன்படுத்தி, சூரரைப் போற்று படத்தை சுவாரஸ்யம் குறையாமல் கடத்தி செல்கிறார்.

இத்திரைப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட வேண்டிய மற்றுமொரு ஆள்தான் ஜி.வி.பிரகாஷ். ஏற்கனவே பாடல்கள் யாவும் சூப்பர் ஹிட் கொடுத்து, சூரரைப் போற்று படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதில் ஜி.வி.யின் பங்குண்டு. மேலும் படத்தின் பின்னணி இசையிலும் மனுஷன் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார். பரபரப்பான காட்சிகள் தொடங்கி, காதல் வழிந்தோடும் குறும்புகள் வரை தனது இசையால் மேலும் மெருகேற்றிவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சாதாரண மனிதன், அவரின் அசாதாரணமான கனவு எப்படி சாத்தியமானது என்பதை முதலில் இத்திரைப்படமாக எடுத்த முயற்சிக்கே படக்குழுவினரை நிச்சயம் பாராட்டலாம். குறிப்பாக எளிய மனிதர்களுக்காக விமான சேவையை நிறுவதில் ஏற்பட்ட தடைகளையும் போராட்டங்களையும், அதை தாண்டி வெற்றிக்கண்ட உறுதியையும் ஆழமாக பதிவு செய்ததில் சுதா கொங்கராவும் அதை திரையில் கொண்டு வந்த சூர்யாவும் டெக்கான் ஏர் விமானமாக உயர்ந்து பறக்கிறார்கள்.

SOORARAI POTTRU (TAMIL) VIDEO REVIEW


Verdict: சூர்யாவின் வெறித்தனமான பர்ஃபார்மன்ஸ் மற்றும் சுதா கொங்கராவின் நேர்த்தியான மேக்கிங்கால் சூரரைப் போற்று ஒரு Inspiring Biopic

BEHINDWOODS REVIEW BOARD RATING

3.5 3.5
( 3.5 / 5.0 )

RELATED CAST PHOTOS

SOORARAI POTTRU (TAMIL) RELATED LINKS

Soorarai Pottru (Tamil) (aka) Surarai Potru

Soorarai Pottru (Tamil) (aka) Surarai Potru is a Tamil movie. Aparna Balamurali, Mohan Babu, Paresh Rawal, Suriya are part of the cast of Soorarai Pottru (Tamil) (aka) Surarai Potru. The movie is directed by Sudha Kongara. Music is by GV Prakash Kumar. Production by 2D Entertainment, Sikhya Entertainment, cinematography by Niketh Bommi, editing by Sathish Suriya.