D.இமான் - அமலி திருமணம்
3 of 12
2002 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் தமிழன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் டி.இமான். அந்த படத்தின் போது அவரின் வயது 18. மிகக்குறைந்த வயதில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான அவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வந்தார். தனது இசைப்பயணத்தில் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் என பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2019 ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அளவில் மிக உயர்ந்த சினிமா விருதான தேசிய விருதை விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமான் பெற்றிருந்தார்.
முன்னதாக தமது முதல் திருமண வாழ்வில் இருந்து விவாகரத்து பெற்றிருந்த டி.இமான், கடந்த மே 15, 2022 அன்று ஞாயிற்றுக்கிழமை அமலி உபால்டுடன் மறுமணம் செய்துகொண்டார்.