7 ஜி ரெயின்போ காலனி

7 ஜி ரெயின்போ காலனி
4 of 5

அன்றைய கால சினிமா காதலுக்கு வேறு பரிமானத்தில் திரைமொழி எழுதிய படமே 7ஜி ரெயின்போ காலனி. கதிர் - அனிதா. கோடிமுறை பார்த்தாலும் திகட்டாத ஜோடி இது. வெள்ளையா இருக்குற பொண்ணுங்க நம்மள எங்கடா பார்க்க போகுது என்ற ஏக்கம் கொண்ட ஏரியா பசங்க வாழ்விலும் அனிதா மாதிரியான தேவதைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையை அடித்து சொல்லியது 7ஜி. காலையில் பால் வாங்க செல்லும் போது நண்பர்களுடன் அடிக்கும் சிகரெட், மொட்டை மாடி ராத்திரி பார்ட்டி , ஏரியா ஃபன்க்‌ஷன், காலனியே ஒன்றாக சினிமா பார்ப்பது என 90-ஸ் தலைமுறைக்கான அந்தக்கால எதார்த்தத்தை கொண்டு வந்த காரணத்திற்காகவே செல்வராகவனுக்கு ஒரு சல்யூட்! செயற்கைதனத்தை மட்டும் 7ஜியில் எங்கு தேடினாலும் இன்று வரை கிடைக்கவில்லை. கிடைக்க போவதுமில்லை. இன்டர்வல் பஸ்ஸ்டான்ட் காட்சி ஒன்று போதும். அந்த காதல் எந்தளவுக்கு தூய்மானது என்பதை சொல்லிவிடும். அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதுவும் 7ஜியில் காட்டிய கதிரின் அப்பா போல் தான் அப்போது அநேக 90-ஸ் கிட்ஸ்களின் அப்பாக்கள் இருந்தனர். அதை செல்வராகவன் சரியாக காட்டியிருந்தார். ஆனால் அப்படியான அப்பாக்களும் உடைந்து போவார்கள் என கதிர் ஹீரோ ஹோன்டாவில் வேலை வாங்கி வந்த காட்சியில் செல்வராகன் காட்டிய எமோஷனும் இப்படி ஒரு பெண் நம் வாழ்க்கையில் வந்துவிட மாட்டாளா என நம்மை ஏங்க வைத்ததும் தான் 7ஜியின் வெற்றி. இதற்கு மத்தியில் யுவனும் நா.முத்துகுமாரும் ஆடியது வேற லெவல் கேம். யூடியூப் இல்லாத அக்காலத்தில் கண் பேசும் வார்த்தைகள் தான் பலமாத ட்ரென்டிங் நம்பர் ஒன். நினைத்து நினைத்து பார்த்து பாடலின் மேல் மற்றும் ஃபிமேல் வர்ஷனில் நா.முத்துகுமார் காட்டிய வார்த்தை ஜாலம், அவருக்கு மட்டுமே உரித்தானது. வாழ்வின் சின்ன சின்ன மொமன்ட்களில் தான் மிகப்பெரிய சந்தோஷம் இருக்கிறது என சொல்லிய 7ஜி எப்போதுமே 90-ஸ் கிட்ஸ்களால் மறக்கமுடியாத காதல் காவியம் தான்.