பல்வேறு உயரிய விருதுகளை வென்றிருந்தாலும், 'ஆஸ்கர்' விருது என்பது தமிழ்ப்படங்களுக்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
அந்தவகையில், சிறந்த 'வெளிநாட்டுப்படம்' என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுகளுக்கு இதுவரை, 9 தமிழ்ப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதுகுறித்த முழுவிவரங்களை இங்கே பார்ப்போம். மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.
ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1969-ம் ஆண்டு வெளியான, 'தெய்வமகன்' திரைப்படம் 42-வது ஆஸ்கர் விருதுகள் விழாவில், சிறந்த 'வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.