Lal Singh Mobile Logo TOP
Viruman Mobiile Logo top

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தோன்றி 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  ஆம், அவரது முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா' ரிலீஸ் ஆகி 62 வருடங்கள் ஆகிறது. 960-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி ரிலீஸ் ஆன  'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் மூலம் தமது 6 வயதில் திரையுலகுக்கு அறிமுகமாகிறார் கமல்.

இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..'  என பாடிய கமல்,  முதல் படத்திலேயே அனைவர் மனதிலும் நன்றாக பதிந்தார். அப்போது தொடங்கிய கமல்ஹாசனின் திரைப்பயணம் தற்போது 'போர் கண்ட சிங்கம்' என 'விக்ரம்' திரைப்படம் வரை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

விருதுகளின் நாயகன்

விருதுகளின் நாயகன்
1 of 6

நடிகர் கமல்ஹாசன் மொத்தமாக இதுவரை 4 தேசிய விருதுகளையும், 1980-ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். இந்திய அரசு சார்பில் 1990-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் வழங்கப்பெற்ற கமல், ஃபிரான்ஸ் அரசு சார்பில் 'செவாலியர்' விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

RELATED NEWS