கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் படம் கடாரம் கொண்டான். டாக்டரான அபி ஹசன் கர்ப்பமான தனது மனைவி அக்சரா ஹாசனுடன் மலேசியாவில் வசிக்கிறார்.
அவர் பணிபுரியும் மருத்துவமனையில் ஆக்சடென்ட் ஆகி அட்மிட் செய்யப்படுகிறார் விக்ரம். அக்சரா ஹாசனை கடத்தி வைத்துக் கொண்டு , விக்ரமை தங்களிடம் ஒப்படைக்குமாறு அபியை மிரட்டுகிறது ஒரு கும்பல்.
யார் அந்த விக்ரம் , அக்சரா ஹாசன் மீட்கப்படுகிறாரா இல்லையா என்பதை பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம் தான் கடாரம் கொண்டான். படத்துக்கு மிகப் பெரும் பலம் விக்ரம்.
ஸ்டைலிஷ் ஆன லுக்கில் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். முதல் பாதி முழுவதும் அடக்கி வாசித்து , அதற்கும் சேர்த்து இரண்டாம் பாதியில் தூள் கிளப்பியருக்கிறார். விக்ரம் ரசிகர்களுக்கு இந்த படம் ட்ரீட் என்று சொல்லலாம்.
நடிகராக அபி ஹசனுக்கு இந்த படம் நல்ல அறிமுகம். மனைவியை இழந்து தவிக்கும் இளைஞன் வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். அக்சரா ஹாசன் நடிப்பில் பெரிய குறை ஒன்றும் இல்லை.
ஒரு பெரும் இசை சாம்ராஜ்யத்தையே நடத்தியிருக்கிறார் ஜிப்ரான். படத்தின் மூடுக்கு ஏற்ப இசையமைத்து காட்சிகளின் வீரியத்தை டபுள் மடங்காக்கியுள்ளார். இந்த படத்தின் சவுண்ட் டிசைனிங் சிறப்பாக இருந்நதது. குறிப்பாக கன் ஷாட்கள் சீன்களில் ஸ்கிரீனைத் தாண்டி நமக்கும் அதிர்கிறது.
பரபர ஆக்ஷன் காட்சிகளை துல்லியமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாசா ஆர்.குதா. குறிப்பாக சேஸிங் சீன்களில் வேற லெவல். படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருந்தது.
விக்ரம் யார் ? அவரின் பின்னணி என்ன ? ஆகியவை ஒரே காட்சியில் விறுவிறுவென சொல்லப்பட்டிருக்கின்றன. படத்தின் மூலமே அதுதான் என்பதால் இன்னும் நிதானமாக சொல்லியிருக்கலாம். முதல் பாதி கதைக்குள் செல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.