‘ராட்சசன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் ‘காடன்’ என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இப்படம் யானைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு ஹிந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’, தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘ஆரண்யா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் ராணா, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸோயா ஹுசைன், கல்கி கோய்சலின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டைங்கை நிறைவு செய்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும் போது காயமடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது ட்வீட்டில், ‘நடிகர்களின் வாழ்க்கை ஈஸி என்று யார் சொன்னா? ஸ்டண்ட் என்ன வேணா செய்யும். (கழுத்து, முதுகு, தோள்பட்டையில் காயம்)..எப்படா இந்த கொடுமையான வலியில் இருந்து மீண்டு வருவேன்னு இருக்கு. எப்போதும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு எனது மரியாதைகளும், பிரார்தனைகளும்..’ என்று ட்வீட்டியுள்ளார்.
who said our lives r easy always...stunts can do nything :( :( neck,spinal chord n shoulder injury...:( cant wait to get bak out of this excruciating pain...always respect n keep the stuntmen in heart n prayers🙏 pic.twitter.com/UzAKo8iss8
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) January 24, 2019