பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும், நடிகருமான விஷால் அண்மையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "ஒரு நடிகரின் படவசூல் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். ஒருசில நடிகர்கள் குறைவாகவும், ஒருசில நடிகர்கள்அதிகமாகவும் சம்பளம் வாங்குகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்பவே சம்பளம் வாங்குகின்றனர்.
நடிகர்கள் மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒரு புரிதலுக்கு வர வேண்டுமென்றால், கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட்என்பதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு கொண்டுவந்தால் வங்கிகளிலும் கடன் வாங்க முடியும். அனைத்து விஷயங்களும் வெளிப்படையாகத் தெரியவரும்," என்றார்.