இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார்.
மேலும் இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் பிஸியாக செயல்பட்டுவந்த பார்த்திபன், நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சுயம் பாதிக்கப்படும் போது சோறு மூன்றாம் பட்சமே' என்று பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'உலக இசை - ஒரு
இசை உலகை வாழ்த்த வழியனுப்பினேன்' என்று தான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
பின்னர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வழியனுப்பி வைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர். நீங்க வருகிறீர்களா என ரஹ்மான் கேட்க நான் வரேன் சார் என்று பதிலளிக்கிறார். ஆனால் அந்த வீடியோவுக்கான பதிவில் 'நான் வரமாட்டேன் என எப்படி சொல்வேன்' என கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷால் பார்த்திபனுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன் ஸ்கரீன்ஷாட்டை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், சார், ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள் . அங்கே எல்லோரையும் விட உங்கள தான் மிஸ் பண்ணேன். எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக தான் இதனை செய்தீர்கள் என்று. உங்களை மிகவும் நேசிக்கிறேன் பதிவிட்டிருந்தார். ஆனால் அவர் பதவி விலகியதற்கு என்ன காரணம் என கூறவில்லை.
நண்பர் விஷாலின் மனப்பூர்வ பாராட்டுக்கு நன்றி pic.twitter.com/86eZ3hG3Pz
— R.Parthiban (@rparthiepan) February 2, 2019