‘சேதுபதி’, ‘செக்கச் சிவந்த வானம்’ போன்ற திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்த விஜய் சேதுபதி காவல் நிலையத்தை பார்த்து பயந்ததாக கூறியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். செல்போன் திருட்டை தடுக்கவும், தொலைந்து போன செல்போனை எளிய முறையில் கண்டுபிடிக்க உதவும் வகையில் "டிஜிகாப்" செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, மக்களின் பிரச்னை குறித்து கூர்மையாக ஆராய்ந்து காவல் துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. பொது மக்களுக்கும், காவல்துறைக்கும் இடைவெளி இருக்கிறது. அதை போக்க காவல்துறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டார்.
இந்த செயலியில் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் அங்குள்ள காவல் அதிகாரி வரை தெளிவான விவரங்கள் உள்ளது எனக்கு பிடித்திருக்கிறது. இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொது மக்களின் பார்வையில் காவல் நிலையங்களின் தோற்றம் ஒரு விதமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதை நானும் உணர்ந்திருக்கிறேன். காவல் நிலைய வாயிலில் இருக்கும் விபத்துக்குள்ளான, பழைய வானங்கள் அகற்றப்பட்டுள்ளதை பார்க்கும் போது அந்த பயம் இல்லை. இந்த முயற்சி அனைத்து காவல் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.