இந்தியன் 2-வில் இணைந்த பிரபல குணச்சித்திர நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார்.

Veteran actor Delhi Ganesh joins the cast of Kamal Haasan-Shankar's Indian 2

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் கடந்த ஜன.18ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘நாயகன்’,‘மைக்கேல் மதன காமராஜன்’,‘காதலா காதலா’,‘பாபாநாசம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பது குறித்து டெல்லி கணேஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், இந்தியன் 2-வில் நடிக்க ஒரு நல்ல வாய்ப்பு. அருமையான, அமைதியான இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல் இவர்களுடன் நல்ல கூட்டணி என பதிவிட்டுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Veteran actor Delhi Ganesh joins the cast of Kamal Haasan-Shankar's Indian 2

People looking for online information on Delhi Ganesh, Indian 2, Indian 2 Shooting, Kamal Haasan, Shankar will find this news story useful.