பாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலா தனது பெயரில் போலி ஆதார் கார்டை வைத்து மோசடி செய்துள்ளதாக, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''எனது போலி ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்தை தவறாகப்பயன்படுத்தி நட்சத்திர ஹோட்டலில் ரூம் புக் செய்துள்ளனர்.
என்னுடைய உதவியாளரிடம் விசாரித்தபோது இதுபோல எதுவும் தான் செய்யவில்லை என தெரிவித்தார்,'' என ஊர்வசி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மும்பை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : Urvashi Rautela