கிராம சபை கூட்டம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் என்னை போல சிறுவனை பாா்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீா்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?'' என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசன் மறைமுகமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதாக கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதாரத்துடன் கூடிய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
உதயநிதி தனது ட்வீட்டில், கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் என கூறி ஆதாரத்திற்கு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் @ikamalhaasan pic.twitter.com/4JA7UriSA2
— Udhay (@Udhaystalin) February 18, 2019