தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்,'' எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கமலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அதில், ''தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல். உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா?," என கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல். உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) March 24, 2018