தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தயாரிப்பாளர்களின் நலன் கருதி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது உண்மையா? என அறிந்து கொள்ள, சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனத்தின் இணை-தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியனிடம் பேசினோம்.
அதற்கு அவர், ''ஆமாம். அது உண்மைதான். தயாரிப்பாளர்களின் நலன் கருதி, தனது உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாக சூர்யாஅறிவித்துள்ளார்,'' என்றார்.