உலகில் நவீன அடிமை முறை அதிகமாகிவிட்ட நிலையில், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் நடிகர் சூர்யா குறும்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யூ கேன் ப்ரி அஸ் என்ற இயக்கம் நவீன அடிமைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் சார்பில் உருவாக்கப்பட்ட ‘ஸ்விட்ச்’ என்ற குறும்படத்தை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில் சுமார் 4 கோடி நவீன அடிமைகள் நம் கண்முன்னே உள்ளனர். அவர்களை கண் திறந்து பார்த்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த குறும்படத்தில் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு ஒரு கண்டெய்னரில் அடைக்கப்பட்டுளனர். பொது இடத்தில் இருக்கும் அந்த கண்டெய்னரை மக்கள் யாரும் கண்டுக் கொள்ளாத நிலையில், ஒரு பள்ளிச் சிறுமி கண்டெய்னரை திறந்து அடிமைகளாக இருக்கும் பெண் குழந்தைகளை மீட்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சூர்யா மட்டுமின்றி பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் நவீன அடிமை முறைக்கு எதிராகவும், மனிதர்கள் கடத்தப்படுவதற்கு எதிராகவும் இந்த குறும்படத்தினை பகிர்ந்துள்ளனர்.
40 million people in modern slavery.Often these victims are right in front of us, but go unseen. Watch “Switch”, a powerful 90s film and please Share.https://t.co/XPKqn0GKsT @youcanfreeus #Switch #YouCanFreeUs #HumanTrafficking #ModernSlavery #parallelmindsproductions
— Suriya Sivakumar (@Suriya_offl) January 22, 2019