சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களுக்கு ஆபாச கமெண்ட் அளித்தவர்களுக்கு, நடிகை சுஜா வருணீ பதிலடி கொடுத்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை. எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை,'' என பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக நீண்ட பதிவொன்றையும் சுஜா வெளியிட்டுள்ளார். அதில் "நான் நடிகை. எனது சாப்பாட்டை நான் பெருமையாகச் சாப்பிடுகிறேன்.சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா?
அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்களே ஏன்? உங்களது காம வெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக்கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்" இவ்வாறு நடிகை சுஜா வருணி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து, சுஜா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.