STM Mob Banner USA
VRV Mob Banner USA

சரித்திர காவியத்தை தயாரிக்கும் சவுந்தர்யா ரஜினி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழில் பிரபல சரித்திர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக தயாரிக்கிறார்.

Soundarya Rajinikanth to produce a web series on Kalki's Novel Ponniyin Selvan

சோழ நாட்டின் பெருமையை பரைசாற்றும் எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்க தமிழ் திரையுலகில் பலரும் முயற்சித்து வரும் நிலையில், சவுந்தர்யா அதனை திரைப்படமாக அல்லாமல் வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். 

இந்நிலையில், பிரபல வீடியோ ஸ்ட்ரீம் நிறுவனமான எம்எக்ஸ் பிளேயர், சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து வெப் சீரிஸாக தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தனது கனவு புராஜெக்ட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10, 11ம் நூற்றாண்டுகளில் சோழ் சாம்ராஜ்ய பேரரசான அருள்மொழிவர்மனின் வாழ்க்கையை பற்றிய கல்கியின் வரலாற்று நாவல் ‘பொன்னியின் செல்வன்’. இந்த நாவலை தழுவி வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. ஹிந்தி மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளிலும் உருவாகவுள்ளது.

பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட சோழ அரச பரம்பரையின் ஆட்சிக் காலத்தை பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இந்த வெப் சீரிஸ் இருக்கும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மேலும், தனித்துவம் மிக்க, பிரம்மாண்ட தொலைநோக்கு பார்வையுள்ள அனுகுமுறை கொண்ட சவுந்தர்யா ரஜினிகாந்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என எம்எக்ஸ் பிளேயர் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இது பொன்னியின் செல்வன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெப் சீரிஸை சூர்யா பிரதாப் இயக்குகிறார்.

RELATED LINKS

Soundarya Rajinikanth to produce a web series on Kalki's Novel Ponniyin Selvan

People looking for online information on Kalki Novel, MX Player, Ponniyin Selvan, Soundarya rajinikanth, Web Series will find this news story useful.