நடிகைகள் பொது வாழ்வில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொள்வது, தொடர் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், பாடகி சின்மயி நேற்று நடைபெற்ற விழாவொன்றில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " வெகு காலத்திற்குப் பிறகு நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்.
இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பல ஆண்களும்-பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கதையை பகிர்ந்தார்கள்.
அதில், ஆசிரியர்கள், சகோதர்கள், தாத்தா-பாட்டிகள், உறவினர்கள், சக பயணிகள் என நெருங்கிய நபர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக உள்ளனர் என்பதுதான்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
After almost aeons I got groped at an event yesterday. I happened to share this story on Instagram and what shocked me is how many men and women have been molested as children (teachers, brothers, co passengers, uncles, grandparents and even women)
— Chinmayi Sripaada (@Chinmayi) March 12, 2018