'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சண்முகபாண்டியன் தொடர்ந்து, 'மதுரை வீரன்' படத்தில் மண்ணின் மைந்தனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தந்தை விஜயகாந்த் வழியில் நடிகர் சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள, புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்.
இந்த இணையதளம் சண்முகபாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு,(ஏப்ரல் 6) நாளை பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.