'உதயநிதி படத்துக்கு ஜெயலலிதா தான் இன்ஸ்பிரேஷன்'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'தர்மதுரை' படத்தின் வெற்றிக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் 'கண்ணே கலைமானே' . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

Seenu Ramasamy revealed Jayalalitha is inspiration for Udhayanidhi's Kanne Kalaimaane's Tamannaah character

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, தர்மதுரை வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் படம் இயக்குவதாக இருந்தது. அப்போது விஜய் சேதுபதியின் வேறு படங்களில் பிஸியாக இருந்தார்.

அப்போது, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக செண்பகமூர்த்தி என்னை அணுகினார். அவர் முக்கிய காரணம் இந்த படம் நான் செய்வதற்கு. இந்த படத்துக்கு அவர் வைத்த ஒரே கண்டிஷன் குத்து பாட்டு வேண்டும் என்பது தான். ஆனால் இந்த படத்தை அதற்கான இடம் இல்லை என்று விளக்கி சொன்னேன்.

பின்னர் உதயநிதியும் நான் பாத்துக்கிறேன் என்றார். பெண் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட உதயநிதியின் தைரியத்திற்கு நன்றி. மிக இயல்பான எதார்த்தமான நடிகர் அவர்.

இந்த படத்துல தமன்னா இந்த படத்தில் தைரியமான பொண்ணு. தைரியமான பொண்ணுன்னா எப்படி இருக்கனும் ? எனக்கு உடனடியாக என் மனதில் வந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவம்.

அவங்களோட நடை, உடை, அவங்க எப்படி பார்க்குறாங்க போன்றவற்றை இண்டர்நெட் மூலம் பழைய புகைப்படங்களை எடுத்து பார்த்தேன். 

அவங்கள ஒரு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டுதான் தமன்னா அந்த வேடத்த செஞ்சாங்க. என்றார்

Seenu Ramasamy revealed Jayalalitha is inspiration for Udhayanidhi's Kanne Kalaimaane's Tamannaah character

People looking for online information on Kanne Kalai Maane, Seenu ramasamy, Tamannaah Bhatia, Udhayanidhi Stalin, Yuvan Shankar Raja will find this news story useful.