சம்மர் வெகேஷனுக்கு கணவர் நாக சைதன்யாவுடன் அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்குள்ள சென்ட்ரல் பார்க்கில் செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், " எனக்கு பொதுவாக 'செல்பி'க்கள் பிடிக்காது. ஆனால் இந்த செல்பி மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் 8 வருடங்களுக்கு முன் இங்குதான் எல்லாம் தொடங்கியது' என தனது காதல் குறித்து அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கு நன்றி தெரிவிக்கவே, இந்த இடத்திற்கு தான் வந்ததாகவும் சமந்தா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.