நடிகர் சிம்புவுடன் இயக்குநர் ரத்தின சிவா இருக்கும் புகைப்படம் ஒன்று, நேற்றுமுதல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனால் ரத்தின சிவா அடுத்ததாக சிம்புவை இயக்கப்போகிறாரா? என்ற கேள்வி, அனைவர் மனதிலும் எழுந்தது. இந்த நிலையில் இயக்குநர் ரத்தின சிவா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர், "இது நட்புரீதியான சந்திப்பே. இன்னும் முழுமையாக எதுவும் உறுதியாகவில்லை. அண்ணனுக்காக காத்திருக்கிறேன்,'' எனதெரிவித்திருக்கிறார்.