Viswasam All Banner USA
Petta USA All Banner

தமிழில் வெளியாகும் மஹதீரா நடிகரின் இந்த ஆக்சன் படம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த மஹதீரா மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது தமிழிலும் அந்த படம் மாவீரன் என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதன் காரணமாக அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம்  கிடைத்தது.

RAM CHARAN STARRER VINAYA VIDHEYA RAMA GETS DUBBED IN TAMIL

இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் இன்று வெளியான படம் வினய விதேய ராமா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தோனி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களின் மூலம் புகழ் பெற்ற கைரா அத்வானி நடித்துள்ளார்.

மேலும் டாப் ஸ்டார் பிரசாந்த், சினேகா மதுமிதா, ஆர்யன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை போயபடி ஸ்ரீனு இயக்கியுள்ளார். காதல், ஆக்சன், காமெடி என கலந்துகட்டி உருவாகியிருக்கும் இந்த படம் மற்ற மொழிகளிலும் வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இந்த படத்தை பிரகாஷ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடவுள்ளது. அதனடிப்படையில் இந்த படம் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

RAM CHARAN STARRER VINAYA VIDHEYA RAMA GETS DUBBED IN TAMIL

People looking for online information on Prashanth, Ram Charan, Sneha, Vinaya Vidheya Rama will find this news story useful.