காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு 6வார கால கெடு விதித்து உத்தரவிட்டது. அந்த கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்த அறிவிப்பை தற்போதுவரை வெளியிடவில்லை.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்,'' என தெரிவித்துள்ளார்.