நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் 'தளபதி 62' படத்தில் அவருக்கு வில்லன்களாக ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் வில்லன்களின் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நமக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, பழ.கருப்பையா கட்சியின் தலைவராகவும் ராதாரவி அவரது கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் நடிக்கவுள்ளனராம்.
பழ.கருப்பையா, ராதாரவி இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கவுள்ளதால், இருவரும் இணைந்து படத்தில் விஜய்க்கு 'டப்' கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.