மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் 'விக்ரம்-வேதா'. விஜய் சேதுபதியும், மாதவனும் போட்டிபோட்டு நடித்திருந்த இப்படம் கடந்தாண்டின் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
இதனால் புஷ்கர்-காயத்ரியின் அடுத்த படம் குறித்த தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், தங்களது அடுத்த பட அறிவிப்பினை இருவரும் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 'விக்ரம்-வேதா' படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
விரைவில் இப்படத்தின் நடிக, நடிகையர் குறித்த முழு விவரங்களையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.