Petta USA All Banner

தல ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா.. அஜித்தின் அடுத்தப்படம் யாருடன் தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ படத்தை தொடர்ந்து அவரது அடுத்தப்படம் பற்றி பரவிய வதந்திக்கு நடிகர் அஜித் தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Post Viswasam, Ajith Kumar has committed for two films with Producer Boney Kapoor

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். மேலும், நஸ்ரியா, கல்யாணி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்தர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அதனை மறுத்துள்ள அஜித் தரப்பு, அஜித் நடிக்கவுள்ள அடுத்த 2 திரைப்படங்களையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். 2020ம் ஆண்டு பாதி வரையில் வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் அஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தல 59 மட்டுமல்லாது தல 60 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Post Viswasam, Ajith Kumar has committed for two films with Producer Boney Kapoor

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thala 59, Viswasam will find this news story useful.