மேட் இன் சென்னை (Made in Chennai) என சென்னை நகரையும், ஆறுகளையும் சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு முயற்சியில் நமது 'பிஹைண்ட்வுட்ஸ்' ஊடகம் களம் இறங்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.
2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முயற்சியின் நிறைவு விழா, சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலான 'ரமடா பிளாசா'வில்(Ramada Plaza) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சீமான்(நாம் தமிழர் கட்சி), அன்புமணி ராமதாஸ்(பாமக), இயக்குநர் மோகன்ராஜா மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி செயலாளருமான அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். சென்னை குறித்த புள்ளிவிவரங்களை அடுக்கிய அவரது பேச்சிலிருந்து ஒருசில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்.
''கூவம் நதியை சுத்தப்படுத்த இதுவரை 12 ஆயிரம் கோடி முதல் 15 ஆயிரம் கோடிகள் வரை செலவழித்துள்ளனர். கூவத்தை சுத்தப்படுத்த முடியுமா? முடியும். ஆனால் இதுவரை யாரும் அதனை செய்து முடிக்கவில்லை.
அரசியல் என்றாலே அது சாக்கடை தான் என்கின்றனர். ஆனால் இளைஞர்கள் மனது வைத்தால் அந்த சாக்கடையை சுத்தப்படுத்த முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கு.
அந்தத் தீர்வைக் கொண்டு வருபவர்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இளைஞர்கள் மனது வைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,'' நன்றி வணக்கம்.
கீழே உள்ள 'வீடியோ' இணைப்பில் அன்புமணி ராமதாஸின் முழு பேச்சையும் பார்க்கலாம்...