Vijay Sethupathi's first movie for 2018, Oru Nalla Naal Paathu Solrean, will be released in Tamil Nadu by Clapboard Production. This film also starring Gautham Karthik in the lead role is planned for a February 2 release.
Speaking about the film, distributor V Sathyamurthi says, "Till now I have not watched the film because I believe in Vijay Sethupathi sir. This new combo of Vijay Sethupathi sir and Gautham Karthik brother will be a new trendsetter for Tamil cinema and I am quite sure that director Arumuga Kumar will strongly imprint his name in the film industry through ONNPS. Our Clapboard Production is really happy and proud for buying the Tamil Nadu Distribution rights of ONNPS on a minimum guarantee basis. We have a great hope that coming February 2 will be an auspicious day for all.”
விஜய் சேதுபதி போல ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை என, பிரபல நடிகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி தற்போது '96', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'சூப்பர் டீலக்ஸ்' உட்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நடிகர், சிறந்த மனிதர் என நடிகர் கவுதம் கார்த்திக் அவரைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் கூறியதாவது:-
நான் ஊட்டி கான்வெண்டில் படித்துக்கொண்டிருக்கும் போது 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தில் அண்ணா பயன்படுத்திய 'ப்பா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவேன். அப்படிப் பார்த்தால் விஜய் சேதுபதி அண்ணாவுக்கு முன் அந்த வார்த்தை என்னுடையதுதான். 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் அண்ணாவுடன் இணைந்து நடித்தது ஆச்சரியமான அனுபவம். விஜய் சேதுபதி அண்ணா ஒரு அற்புதமான நடிகர், சிறந்த மனிதர்.