தேசிய விருது பெற்ற இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கல்லூரி, பரதேசி, தாரதப்பட்டை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன் இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் டூலெட்.

National award winning film Tolet's release date announced

சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தை பற்றிய இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ் நாயகனாக நடிக்க, பிரபல நாட்டியக் கலைஞரான ஷீலா நாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகனாக தருண் என்ற சிறுவன் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருது பெற்றது. மேலும் இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 32  விருதுகளை பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. 

National award winning film Tolet's release date announced

People looking for online information on Chezhian, National Award, Tolet will find this news story useful.