பாலிவுட் நடிகை நடாஷா சூரி பிரபல நிறுவனமொன்றின் கடைத்திறப்பு விழா ஒன்றிற்காக, சமீபத்தில் இந்தோனேஷியா சென்றார். திறப்பு விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தான் ஆசைப்பட்டபடி கயிற்றைக் கட்டிக்கொண்டு, நடாஷா தலைகீழாக பங்கி ஜம்பிங்கும் செய்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதியிலேயே அந்தக் கயிறு அறுந்து விழுந்தது.
பங்கி ஜம்பிங் செய்தது ஆற்றை ஒட்டிய இடமென்பதால் கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே நடாஷா விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைகீழாக விழுந்ததால், 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடாஷா வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.