மேட் இன் சென்னை (Made in Chennai) என சென்னை நகரையும், ஆறுகளையும் சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு முயற்சியில் நமது 'பிஹைண்ட்வுட்ஸ்' ஊடகம் களம் இறங்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.
2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முயற்சியின் நிறைவு விழா சமீபத்தில், சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலான 'ரமடா பிளாசா'வில்(Ramada Plaza) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அன்புமணி ராமதாஸ்(பாமக), சீமான்(நாம் தமிழர் கட்சி), இயக்குநர் மோகன்ராஜா மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக இயக்குநர் மோகன்ராஜா உரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து ஒருசில துளிகளை இங்கே பார்க்கலாம்.
''அனைவருக்கும் வணக்கம். 'வேலைக்காரன்', 'வேலாயுதம்' படங்களில் நான் சொன்னது இதுதான். தலைவர்களை நம்பவே நம்பாதீர்கள். உன்னுடைய பிரச்சினைகளை நீயே சந்தித்துக்கொள்.
கலாம் வந்தால் மாறும், கெஜ்ரிவால் வந்தால் மாறும் என காத்துக்கொண்டு இருக்கிறோம். இதைத்தான் நான் 'வேலைக்காரன்' படத்தில் சொன்னேன். ஒரு ஆம்புலன்ஸ் வந்தால் கூட அதன் பின்னால் சென்று விடுவோமா? நேரம் மிச்சமாகும் என்றுதான் நாம் நினைக்கிறோம்.
அடிமையாக இருப்பது தெரியாமலேயே நாம் அடிமையாக இருக்கிறோம். 'கருத்தவெல்லாம் கலீஜா' பாடலில் நான் அதைத்தான் சொன்னேன். நாம ஏன் வெளிநாட்டினரைப் பார்த்து காப்பி அடிக்கணும் நாம நம்ம அடையாளத்தோட இருக்கலாம்.
ஏன்னா குப்பத்துல இருக்கறவங்க தான் எல்லாத்தையும் சரியா செய்யறாங்க. நாம வெக்கப்படறோம். தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்,'' இவ்வாறு அவர் பேசினார்.
மோகன்ராஜாவின் முழுமையான பேச்சைக் காண, கீழே உள்ள 'வீடியோ' லிங்கைக் 'கிளிக்' செய்யவும்...