மெஹந்தி வைச்சா மேரேஜ் ரெஜிஸ்டிரேஷனில் சிக்கலா? மனோபாலாவின் மகன் ரிசப்ஷனில் வினோதம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் திருமணத்தில் நிகழ்ந்த வினோதமான சம்பவம் குறித்து மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Manobala's daughter-in-law faces difficulties while register her Wedding because of her Mehandi design

நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மகன் ஹரிஷுக்கும், பிரியா என்பவருக்கும் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சிவகார்த்திகேயன், சதீஷ், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குநர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு, அதனை பதிவு செய்யும் பணிகளில் மனோபாலாவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணப்பெண்ணான பிரியா கையில் மெஹந்தி வைத்திருந்ததால், ரேகை பதிவு செய்யும் மெஷினில், பிரியாவின் கைரேகை பதிவாகவில்லை. பிறகு சில முயற்சிகளை மேற்கொண்டு கட்டை விரலில் இருக்கும் மெஹந்தியை அழித்துவிட்டு திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில். ‘இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை.. கட்டைவிரலில் வைத்தால் மேரேஜ் ரிஜிஸ்டரேஷன் கஷ்டமாகிவிடும்.. மெஷின் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறது.. be careful ..கட்டைவிரல் தவிர மெஹந்தி வைத்து கொள்ளுங்கள்.. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள்..’ என்று மனோபாலா தெரிவித்துள்ளார்.

Manobala's daughter-in-law faces difficulties while register her Wedding because of her Mehandi design

People looking for online information on Harish Weds Priya, Manobala, Manobala Son Wedding, Marriage Registration will find this news story useful.