பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மனின், 'ஷிட்டட்' படத்தில் ஶ்ரீதேவி நடிக்கவிருந்தார். அவர் திடீரென இறந்ததையடுத்து, அந்த வேடத்தில் தற்போது நடிகை மாதுரி தீட்சித் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ''அபிஷேக் வர்மனின் அடுத்த படம் என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்த அழகான படத்தில் மாதுரிஜி நடிப்பதற்கு நான்,தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.