தேனி 'தீ விபத்தில்' உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு..'கமல்' நேரில் ஆறுதல்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கடந்த வாரம் தேனி மாவட்டம் குரங்கணி பகுதிக்கு மலையேற்றம் சென்ற 36 பேர், எதிர்பாராதவிதமாக காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர்.

 

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்துக்கு, இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

 

இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த உஷா, அனுவித்யா ஆகிய 2 பெண்களின் குடும்பத்தினரை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், "இதனை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று கூறினார்.

யாருக்கோ 'சாமரம்' வீசுகிறது அரசு: கமல்ஹாசன் காட்டம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ரத யாத்திரை தொடர்பாக தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி.

 

மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல்  யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு,'' என காட்டமாக தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

Kamal Haasan meets kurangani forest fire victim Nisha's family tamil cinema news

People looking for online information on Kamal Haasan will find this news story useful.