திரைக்கதை ஆசிரியரும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து தனது பேஸ்புக் பக்கத்தில், இருவர் பேசிக்கொள்ளும் சுவாரசியமான உரையாடலொன்றை பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்திட தொடர் எதிர்ப்புகள் நிலவிவரும் சூழ்நிலையில், வெகுஜன மக்களின் மனங்களை பிரதிபலிப்பது போல இந்த உரையாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று பூங்காவில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு அமர்ந்தபோது பக்கத்து இருக்கையில் நடுத்தர வயதைச் சேர்ந்த இருவர் அவர்களுக்குள் உரக்க பேசிய உரையாடல்:
நபர் 1: அறிவுகெட்டவனுங்க. IPL ஆட்டத்த தட பண்ணனுமாம். ஒடனே காவிரி வந்துருமா? இவனுங்கள வச்சுகிட்டு...
நபர் 2: அதுல என்ன தப்பு. IPLல நடத்தற அதே பணக்காரனுங்கதான் Governmentடையே நடத்தறானுங்க. அவனுங்கதான் main switch. சென்னைல மட்டும் இல்ல. எங்கயுமே IPL நடக்கவுடாம செஞ்சா வாரியம் கீரியம் எல்லாம் தானா வரும்.
நபர் 1: இப்படியே பேசிகிட்டு இருந்தனு வச்சுக்க anti-indian மாதிரி anti-cskநு உன்ன ஊரவுட்டே ஒதுக்கிவச்சிருவானுங்க. சென்னைக்குள்ள நீ அன்னந்தண்ணி பொழங்க முடியாது
நபர் 2: மாப்பு... சென்னைல இன்னும் எத்தன நாளைக்கு தண்ணி இருக்கும்னு நீ நெனைக்கற?
தொலைக்காட்சியில் நடக்கும் நீண்ட நெடிய விவாதங்களை விட இந்த சிறு உரையாடல் சிறப்பு.