அடுத்தடுத்து 3 திரைப்படங்களில் நடிக்கும் ஜெயம் ரவி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘அடங்கமறு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அடுத்தடுத்து 3 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Jayam Ravi signed back to back films with Screen Scene Production

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, இளமையான, துடிப்பான தயாரிப்பு நிறுவனத்துடன் அடுத்தடுத்து 3 திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்க்ரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள 3 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இது தவிர, தனி ஒருவன் 2, சங்கமித்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் ஜெயம் ரவியின் கைவ்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi signed back to back films with Screen Scene Production

People looking for online information on Adanga Maru, Jayam Ravi, Screen Scene Production will find this news story useful.