திரும்ப வரும் சத்யா-கனெக்‌ஷன் சொல்லும் இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாதா 87’ திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

Is Charuhasan’s character a continuation of Kamal’s Sathya? Director Vijay Sri Opens Up

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த் பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் தயாரித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் என அனைத்து நல்ல வரவேற்பை பெற்று திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், இப்படம் கடந்த 1988-ல் கமல்ஹாசன் - அமலா நடிப்பில் வெளியான ‘சத்யா’ திரைப்படத்தை தழுவி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து நாம் ‘தாதா 87’ திரைப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீயை தொடர்புக் கொண்டபோது, ‘100% சத்யா திரைப்படத்திற்கும், தாதா 87 படத்திற்கும் தொடர்பு உள்ளது. கமல் சாரின் சத்யா திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே எனது திரைப்படத்தின் லீட் கேரக்டருக்கு சத்யா என்ற பெயரை வைத்தேன்.

சத்யா படத்தில் கமல் சார் போட்டிருந்த கருப்பு கயிறு, கையில் காப்பு போன்ற ஒற்றுமை மட்டுமல்ல, திரைப்படம் கூட அதன் தொடர்ச்சியாக இருக்கும். சத்யா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகின்றன, அந்த சத்யா தற்போது இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்த தாதா 87 என்றார். இதில் சத்யாவாக நடித்துள்ள சாருஹாசன் சாரின் லுக்கும், எக்ஸ்ப்ரெஷனும் கமல் சார் போன்றே இருக்கும். இதை படத்தை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

RELATED LINKS

Is Charuhasan’s character a continuation of Kamal’s Sathya? Director Vijay Sri Opens Up

People looking for online information on Charuhasan, Dhadha, Kamal Haasan, Saroja, Sathya, Vijay Sri will find this news story useful.